உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English
மலர் மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட சண்முகர், வள்ளி தேவசேனா சமேதராய்; முன்னே அருணகிரிநாதரும் ஆதிசங்கரரும்

முருகனுக்கு அரோகரா

திருப்புகழின் பெருமையைப்பறைசாற்றும் 89 ஆண்டுகள்

1937 முதல், திருச்செந்தூர் தெப்பக்குளக் கரையில் — முருகப் பெருமான் மீதான பக்தியை வளர்க்கும் சங்கீத சபை.

முன்னுரை

சூரபத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றிய மறக்கருணை புரிந்து, சுப்ரமண்யப் பரம்பொருள் கயிலை மலையிலிருந்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டு வந்த போது, அவருடன் ஈராயிரம் திரிசுதந்திரர்களும் வந்தனர். "உங்களில் நானும் ஒருவன்" என்று முருகன் கூறுவதாக வடமொழி ஸ்காந்தம் சொல்லுகிறது.

— சபையின் நூலிலிருந்து, 2023

ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மணி; நூற்றாண்டில் சுற்று நிறைவுறும். 89 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் ஆனி மாதக் குமார சஷ்டியைப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறது இச்சபை.

சபையின் வரலாறு

1937 முதல் இன்று வரை

  1. 1937

    தொடக்கம்

    பெருமை மிக்க செந்தில் மாநகரில் வாழ்ந்த திரிசுதந்திரப் பெருமக்களுள், பக்த சிரோன்மணிகளான திரு. மூக்கண்ணா எனும் திருவாரியாரும், திரு. சங்கரநாராயண தீக்ஷிதரும், மற்றும் பலரும் சேர்ந்து, 1937-ஆம் ஆண்டில் ஸ்ரீ முருகானந்த சங்கீத திருப்புகழ் சபையை ஆரம்பித்து, திருப்புகழைப் பாடிப் பரப்பி வந்துள்ளனர்.

  2. 1937· ₹1,001

    ரூபாய் 1,001 — முதல் நன்கொடை

    அச்சமயம், "திருப்புகழ் மணி" எனப் பட்டம் சூட்டப்பெற்ற நீதிபதி திரு. டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் இச்சபைக்கு ரூபாய் 1,001 நன்கொடையாக வழங்கி ஊக்குவித்துள்ளார்.

    அத்தோடு பலரிடமும் நன்கொடை பெற்று, திருப்புகழ் வளர்ச்சிப் பணிகளுக்காக அவ்வூர் தெப்பக்குளம் தெருவில் 33 சென்ட் நிலம் வாங்கி, அதில் ஒரு கட்டிடமும் கட்டி, பிரதி ஆண்டும் சபையின் பிரம்மோத்சவமாக ஆனி மாதத்தில் வரும் சுக்கில பக்ஷ குமார சஷ்டியைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளனர்.

  3. வெள்ளியிலான ஸ்ரீ பாலசுப்ரமண்யர், வேலுடன், திருவாச்சியின் நடுவே

    அத்தியாயம் 3

    மூலவர் வந்த வரலாறு

    இச்சபையில் மூலவராக, வெள்ளியிலான ஸ்ரீ பாலசுப்ரமண்யர் அதிசயத்தக்க வகையில் அங்கு வந்து பிரதிஷ்டையாகி பூஜிக்கப்பட்டு வருகிறார்.

    திருச்செந்தூரின் கிழக்கு எல்லையான கடற்கரையில் செந்திலாண்டவர் வீற்றிருப்பது போல், ஊரின் மேற்கு எல்லையான தெப்பக்குளக்கரையில் — நமது திருப்புகழ் சபையில் — ஸ்ரீ குளக்கரை சாநித்தியமாக அவரே வீற்றிருக்கிறார்.

  4. கைகூப்பிக் குனிந்து வணங்கும் பெரியவரை ஸ்வாமிகள் ஆசீர்வதிக்கிறார்அரிய படம்

    1970-கள்

    காஞ்சி ஆச்சார்யரின் வருகை

    1970-களில், ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நமது திருப்புகழ் சபைக்கு விஜயம் செய்தருளினார். பின்னர் அவர் காஞ்சிபுரம் மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சார்யாராகப் பொறுப்பேற்றார்.

    வருகையின் 9 படங்களையும் காண →

  5. விநாயகர் துதிப் பாடலின் சித்திரம் — நடுவே விநாயகர், இருபுறமும் அவரது கதைக் காட்சிகள், கீழே பாடல் வரிகள்

    அத்தியாயம் 5

    சித்திர சபை — திருப்புகழ் கருவூலம்

    சிவபெருமானுக்கென அமைக்கப்பெற்றுள்ள ஐந்து சபைகளுள், திருக்குற்றாலத்தில் அமைந்துள்ள சித்திர சபை போல, திருச்செந்தூரில் அமைந்துள்ள இந்தத் திருப்புகழ் சபையை திருப்புகழ் சித்திர சபையாக உருவாக்கத் திருப்புகழ்ச் செந்திலாண்டவன் சித்தம் கொண்டான்.

    மும்பையில் வாழும் திருப்புகழ் அன்பர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் திருப்புகழ் சித்திரங்களை வரைய ஆரம்பித்தார். வரைந்த அனைத்துச் சித்திரங்களும் திருச்செந்தூர் வந்தடைந்தன. அவரே திருச்செந்தூரில் தங்கி, அவைகளைச் சுவரில் பொருத்தி வைத்தார்.

  6. 2022

    புதிய ஆலயம்

    சுமார் 85 வருடங்கள் பழமையான இச்சபையின் கட்டிடம் பழமை இழந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதை நீக்கிப் புது கட்டிடம் கட்டுவது காலத்தின் கட்டாயமாகியது. 11-02-2022 அன்று புதுக் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கின.

    ஓராண்டிற்குள் 75 அடி நீளமும் 35 அடி அகலமும் கொண்ட பெரிய மண்டபம் கட்டப்பட்டது. அதனுள் விநாயகர், பாலசுப்ரமண்யர், வள்ளி–தேவசேனா நாச்சியார்கள், சண்முகர் ஆகியோருக்குத் தனித்தனிக் கருவறைகளும், அவர்களுக்கெனத் தனித்தனி விமானங்களும் கட்டப்பட்டன. தனியாக ஒரு சமையல் கட்டும், முதல் தளத்திற்குச் செல்வதற்கெனப் படிக்கட்டுகளும் கட்டப்பட்டன.

  7. 2023

    மகா கும்பாபிஷேகம்

    திருப்பணிகளும் செவ்வனே பூரணப்படுத்தப்பட்டு, 27-01-2023 அன்று மகா கும்பாபிஷேகமும் கும்பகோணம் திரு. சேனாபதி அவர்களின் குழுவினரால் நடத்தப்பட்டது.

    முருகனடியார்கள், திருப்புகழ் பாடும் அன்பர்கள், ஆன்மீகப் பெருமக்கள், திருச்செந்தூர் வாழ் திரிசுதந்திரப் பெருமக்கள், சங்கரநாராயண தீக்ஷிதரின் குடும்பத்தினர் போன்றோர் அளித்த பொருளுதவியினால் இப்பணிகள் நிறைவேறின.

  8. வீதி உலா — தெருவில் அடியார்களும் அர்ச்சகர்களும்

    அத்தியாயம் 8

    இன்று

    சங்கரநாராயண தீக்ஷிதரின் மகனான கயிலைமணி முத்து சுப்ரமண்ய தீக்ஷிதர் அவர்கள், தம் தந்தையாருக்குப் பின் அருளாட்சி நடத்திக் கொண்டும், திருப்புகழ் பாடிக்கொண்டும், கடந்த 35 ஆண்டுகளாக இச்சபையை நிர்வகித்து வருகிறார். திரு. கணேசன் அவர்களும் உதவி புரிந்து வருகிறார்.

முழு வரலாற்றையும் படிக்க →

ஆண்டுதோறும்

தமிழ் ஆண்டின் ஒவ்வொரு திருநாளும் சபையில் தவறாமல் நடைபெறுகிறது.

  1. சித்திரை
  2. வைகாசி
  3. ஆனிசுக்கில பக்ஷ குமார சஷ்டி — சபையின் பிரம்மோத்சவம்1937 முதல்
  4. ஆடி
  5. ஆவணிபத்து நாள் விழா
  6. புரட்டாசி
  7. ஐப்பசிஅமாவாசை முதல் கந்த சஷ்டி
  8. கார்த்திகைசுக்ல சஷ்டி
  9. மார்கழி
  10. தைரேவதி நட்சத்திரம் — வருட அபிஷேகம்
  11. மாசிபத்து நாள் வேத பாராயணம்
  12. பங்குனி

ஒவ்வொரு மாதமும் — அமாவாசை அபிஷேகம்

வரவிருக்கும் நிகழ்வுகள்

  • 15 டிச., 2026

    சுக்ல சஷ்டி

முழு நிகழ்ச்சி அட்டவணையைக் காண்க →

அடியார்களுக்குச் சபை வழங்கியவை

நூல்களாக அச்சிட்டும், சுவர்களில் சித்திரங்களாக வரைந்தும், இன்று இணையத்திலும் — திருப்புகழ் ஒவ்வொரு அடியாரையும் சென்றடைய.

இணையத்தில் திருப்புகழ்ப் பாடல்கள்
1,324
சபை வெளியிட்ட நூல்கள்
9
ஆண்டுதோறும் திருநாள்கள்
6
ஆண்டுகள், இடைவிடாமல்
89

இன்றைய திருப்புகழ்

ஆடல்மத னம்பின் மங்கைய

பாடல் 968 · ஸ்ரீ புருஷமங்கை

முழுப் பாடலையும் படிக்க →

இன்று சபையில் — தரிசனம்

நான்கு சந்நிதிகள்; ஒவ்வொன்றிற்கும் தனித்தனிக் கருவறையும் விமானமும்

அடுத்த அத்தியாயம்

யாத்திரி நிவாஸ் — பக்தர்கள் தங்கும் விடுதி

பதினைந்து அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதியும், ஒரே நேரத்தில் ஐம்பது பேர் உணவருந்தும் கூடமும். செந்திலாண்டவனைத் தரிசிக்க வரும் அடியார்களுக்காக.

யாத்திரி நிவாஸ்
15 அறைகள்
சமையலறை
சுத்தமான, செயல்திறன் மிக்க வசதி
உணவருந்தும் கூடம்
ஒரே நேரத்தில் 50 பேர்
திட்ட மதிப்பீடு
சுமார் ₹2.5 கோடி

சபையின் நூலில் குறிப்பிடப்பட்ட ஐந்து திருப்பணிகள்

  1. மூலவர் விக்ரகமும் கருவறையும்
  2. திருப்புகழ் சித்ர சபை
  3. கோசாலை
  4. நந்தவனம்
  5. பல் நோக்கு கட்டிடம்

திருப்பணி விவரங்கள் →

இத்திருப்பணியில் நீங்களும் பங்கேற்கலாம்

“தங்களின் திருவுள்ளத்தில் அவன் உணர்த்திய படி, அவனுடைய ஆலயம் கட்டப்பட அதில் செய்யப்பட வேண்டிய சிறு சிறு திருப்பணிகளை நேரிடையாகச் செய்தோ அல்லது திரவியமாக நன்கொடை அளித்தோ உதவி புரிய வேணுமாய் பிரார்த்திக்கிறேன்.”

— கயிலைமணி முத்து சுப்ரமண்ய தீக்ஷிதர், அடியேனின் விண்ணப்பம்

யாத்திரி நிவாஸில் ஒரு அறையின் கட்டுமானத்திற்கு ₹5 லட்சம் நன்கொடையாக வழங்கலாம். எந்த அளவிலான நன்கொடையும் இப்பணியை முன்னெடுத்துச் செல்லும்.

வங்கி மூலம் நன்கொடை

கணக்கின் பெயர்
Sri Murugananda Sangeetha Thirupugazh Sabhai
வங்கி
ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்
921020046436937
IFSC
UTIB0002810
PAN
ABCTS3986L